வெடித்து சிதறிய காஸ் சிலிண்டர்: 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
கொல்கட்டா : மேற்கு வங்கத்தில், வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேற்கு வங்கத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதார் பிரதிமா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில், நேற்று இரவு திடீரென சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில், நான்கு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததாகவும், அதிலிருந்து தீ பரவியதால், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதும் தெரிய வந்துள்ளது.
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்