ஊட்டி தோட்டக்கலை பூங்காக்களில் மூன்று மாதம் படப்பிடிப்புக்கு தடை

ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட எட்டு பூங்காக்களில் மூன்று மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட சினிமா பட பிடிப்புகள் நடக்கிறது.
அதில், நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் கட்டண அடிப்படையில் சினிமா படபிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு சென்னையில் உள்ள தோட்டக் கலை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், ஒரு நாளுக்கு அரசு தாவரவியல் பூங்கா, 50 ஆயிரம் ரூபாய் ; தேயிலை பூங்கா, 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பட பிடிப்புகளை நடத்தலாம்.
இந்நிலையில், ஊட்டியில் ஏப்., மே மாதங்களில் கோடை சீசன் நடக்கிறது. சீசனுக்கு வெளி மாநிலங்கள் , பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவது வழக்கம். இந்த காலக்கட்டகளில் படப்பிடிப்பு நடத்தி, சுற்றுலாப் பயணியர் பாதிக்காமல் இருக்க, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள, 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''தோட்டக்கலைக்கு சொந்தமான பூங்காக்களில் சுற்றுலா பயணியர் எவ்வித பாதிப்பும் இன்றி பூங்காக்களை ரசித்து செல்லும் வகையில் ஏப்., மாதம் முதல் ஜூன் 30ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை,'' என்றார்.
மேலும்
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
இப்ப டில்லிக்கு போனீங்களே, சொல்லிட்டு வந்தீங்களா? இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆன்லைன் சூதாட்ட தடை நடவடிக்கை: தீவிரம் வேண்டும் என்கிறார் அன்புமணி
-
7 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்