சேலம் கோட்ட ரயில்வேக்கு புதிய மேலாளர்

கோவை : இந்தியன் ரயில்வே பல்வேறு மண்டலங்களில், 13 கோட்டங்களில் புதிய ரயில்வே மேலாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, சேலம் கோட்ட ரயில்வே மேலாளராக, பன்னாலால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளராக இருந்த பங்கஜ்குமார் சின்காவுக்கு பதிலாக, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்னாலால், வடகிழக்கு ரயில்வேயில் பணிபுரிந்தவர். 1995ம் ஆண்டு, இந்திய ரயில்வே இன்ஜினியர்கள் சேவை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் பொறுப்பேற்க உள்ளார்.

Advertisement