'தேயிலை ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமதி கவலை அளிக்கிறது'

புதுடில்லி; இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்த போதிலும், இறக்குமதி உயர்ந்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என, தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2024ம் ஆண்டில், தேயிலை ஏற்றுமதியில் இந்தியா, இலங்கையை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தது.

கடந்த, 2023ம் ஆண்டில் 23.17 கோடி கிலோவாக இருந்த தேயிலை ஏற்றுமதி, 2024ல் 25.47 கோடி கிலோவாக அதிகரித்துஉள்ளது.

மேலும், ஏற்றுமதி வருவாய் 6,160.86 கோடியில் இருந்து, 7,111.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2024ம் ஆண்டிற்கான சர்வதேச தேயிலைக் குழுவின் தரவுகளின்படி, கென்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது-. 2023ல் இலங்கை மூன்றாவது இடத்தில் இருந்தது.

இருப்பினும், இந்திய தேயிலை சங்கங்கள், நிகர ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளன.

மாறாக, கென்யாவில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதி 225 சதவீதம் அதிகரித்து, 2024ல் 1.71 கோடி கிலோவாக அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாக கவலை தெரிவித்துள்ளன.



காலம் அளவு (கோடியில்) மதிப்பு (ரூ.கோடியில்) கிலோ விலை

2024 ஜன., - டிச.,* 25.47 7,111.43 279.242023 ஜன., - டிச., 23.17 6,160.86 265.91* தற்காலிக புள்ளி விபரங்கள்ஆதாரம்: தேயிலை வாரியம்.

Advertisement