தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு 'குண்டாஸ்'

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 27; இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த பிப்ரவரி 21ம் தேதி மோ.வனஞ்சூரில் வினோத் என்பவர் வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் கள்ளக்குறிச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த், உத்தரவிட்டார்.
கடலுார் மத்திய சிறையில் உள்ள ராஜாவிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை கள்ளக்குறிச்சி போலீசார் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement