பைக்கில் நுாதனமாக மது கடத்தல் புதுச்சேரி வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைக்கில் ரகசிய அறை அமைத்து மதுபாட்டில்களை கடத்திய புதுச்சேரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று நேருஜி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து பேஷன் ப்ரோ பைக்கில் வந்த நபரை நிறுத்தி, சோதனை செய்தனர்.

அதில், பைக் பின் சீட்டின் கீழ் பகுதியிலும், பெட்ரோல் டேங்க்கின் ஒரு பகுதியிலும் ரகசிய அறை அமைத்து 140 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்து.

விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம், கரையாம்புத்துாரைச் சேர்ந்த மணி மகன் அசோக்குமார், 30; என்பதும், விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிந்தது.

அசோக்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement