தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி

கூடலூர்: நீலகிரியில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டியதில் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சினான், ஆசிப், 23, ஜாபீர், 24 ஆகிய மூன்று சுற்றுலா பயணிகள், இன்று, நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, ஊசிமலை காட்சி முனைக்கு சென்றனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்றனர். அப்போது ஆசிப், ஜாபீர், ஆகியோரை தேனீக்கள் கொட்டியது. ஆசிப் தேனீக்களிடமிருந்து தப்பினர். சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஜாபீர் தேனீக்களிடம் சிக்கினர்.

தீயணைப்பு வீரர்கள், வனத்துறை ஊழியர்கள், போராடி அவரை மீட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் உயிரிழந்தார். இது குறித்து நடுவட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement