காரில் மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது

விழுப்புரம் : திண்டிவனம் அருகே காரில் மதுபாட்டில் கடத்திய சென்னை ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் சோதனை சாவடியில், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.

அப்போது, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த இன்னோவா காரை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள், சென்னை, ஆலகிராமத்தைச் சேர்ந்த பொய்யாது மகன் ரமேஷ், 46; சாலிகிராமம் லத்தீப் மகன் ரகீம், 37. புதுச்சேரியில் மதுபாட்டில்கள் வாங்கி, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement