துணை தாசில்தார், முதுநிலை ஆர்.ஐ., 6 பேருக்கு பதவி உயர்வு வழங்கல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் 3 துணை தாசில்தார் மற்றும் 3 முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கல்வராயன்மலையில் துணை தாசில்தாராக பணிபுரிந்த அந்தோணிராஜ் கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும், வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் அதே அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், வாணாபுரம் மண்டல துணை தாசில்தார் வினோத்பாபு கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் அனந்தசயனன் திருக்கோவிலுார் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முதுநிலை வருவாய் அலுவலர் அலகில் கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த கோதண்டராமன் கல்வராயன்மலை தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கல்வராயன்மலை செல்வகுமார் அதே அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலராகவும், திருக்கோவிலுார் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி தேர்தல் பிரிவு தலைமை உதவியாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணிபுரிந்த தனலட்சுமி, வாணாபுரம் மண்டல துணை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் பிரசாந்த் பிறப்பித்துள்ளார்.

Advertisement