வெந்த புண்ணில் வேல்பாய்ச்சிய கர்நாடகா அரசு என ஆவேசம்

பெங்களூரு: ஏழை, எளிய மக்கள் மீது பாரத்தை ஏற்றும் வகையில், கட்டண உயர்வு அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியது போன்றுள்ளதாக, கர்நாடக மாநில எம்.ஜி.ஆர்., மன்ற முன்னாள் இணை செயலர் எஸ்.எம்.பழனி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஐந்து வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ், ஏழை, எளிய மக்கள் மீது பாரத்தை ஏற்றும் வகையில், கட்டண உயர்வு அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியது போன்றுள்ளது.
மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விசில் அடித்து குப்பை வரி என விலை உயர்வு தான். அனைத்து உரிமைகளையும் இழந்தாவது பதவியை காப்பாற்ற வேண்டும் என அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
வருங்கால சந்ததியரை நினைக்காமல், ஓட்டு வங்கிக்காக மட்டும் திட்டம் தீட்டப்படுகின்ற வேளையில், தன்னலமற்ற தலைவர்களை காண முடியவில்லை. கடந்த காலங்களில் பேச்சு, எழுத்து, மொழி, கலை, உணவு, உடை, பண்பாடு அனைத்திலும் பேருடன் விளங்கியது. இதை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் எதிர்கொண்ட பிரச்னைகள், மாற்றங்கள், தீர்வுகள் என்ன என்பதை விரிவாக அலசி பார்க்க நேரம் இல்லை. மாநிலத்தின் வளர்ச்சி உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சீர்திருத்தம் தேவை. மக்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் மாற்றம் காணுமா?
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி