தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வி. கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த நபர் சின்னசேலம், அசிபா நகரை சேர்ந்த பாபு மகன் பரதன், 30; என்பதும், கடந்த ஜனவரி மாதம் மரவானத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி கன்னியம்மாளிடம் மூன்றரை சவரன் தாலி செயினை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் பரதன் கடந்த 2020ம் ஆண்டு சின்ன சேலம் பகுதியில் உள்ள எலவடி, பெரியசிறுவத்தூர், ஏரவார் உட்பட 8க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரிடமிருந்து 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் நேற்று பரதனை கைது செய்தனர்.
மேலும்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி