காரில் கடத்திய ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல் ஒருவர் கைது: 2 பேர் தப்பியோட்டம்

விழுப்புரம் : பெங்களூருவில் இருந்து விழுப்புரம் வழியாக காரில் கடத்தி வந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாலுகா சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு, விழுப்புரம் தென்னமாதேவி டோல்கேட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் நோக்கி வந்த இன்னோவா காரை சோதனை செய்தபோது, 3 வாலிபர்கள் இருந்தனர். ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் காரின் கதவை திறக்க கூறிய போது, காரை ஓட்டி வந்த நபர், திடீரென தலைமை காவலர் ராஜ்குமார் மீது காரை மோதி தள்ளினார். தொடர்ந்து, எதிரே நிறுத்தியிருந்த மற்றொரு கார் மீது மோதி விட்டு விழுப்புரம் பைபாஸ் வழியாக புதுச்சேரி மார்க்கமாக வேகமாக சென்றது.
போலீசார் காரை துரத்தி சென்று, காவணிப்பாக்கம் மேமம்பாலத்தில் மடக்கினர். காரில் இருந்த புதுச்சேரியை சேர்ந்த கதிரவன், வானுார் வெங்கடேசன் இறங்கி தப்பியோடினர். வானுார் முருகன் மகன் ராமச்சந்திரன்,29; என்பவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், மூவரும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து, வானுார் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. காரில் 19 மூட்டைகளில் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ராமச்சந்திரனை கைது செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி