ஆஸ்துமாவை குணமாக்கும் ஆதி நாதேஸ்வரா

பொதுவாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தால், புண்ணியம் கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கஷ்டங்களை மட்டுமல்ல, நோய்களை குணமாக்கும் கோவில்களும் உள்ளன.
கடலோர மாவட்டத்தின், கோவில் ஒன்றில் குடிகொண்டுள்ள ஆதி நாதேஸ்வரர், ஆஸ்துமாவை குணமாக்கும் சக்தி கொண்டவர். டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றாலும் முழுமையாக குணம் ஆவதில்லை. குளிர்க்காலம், மழைக்காலம் என, அனைத்து பருவ காலத்திலும் அவதிப்படுத்தும். இத்தகைய மக்களுக்கு ஆபத்பாந்தவனாக ஆதி நாதேஸ்வரா விளங்குகிறார்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரின், ஆத்யபாடி கிராமத்தில் ஆதி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆஸ்துமா, வயிற்று உப்புசம், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் குணமடைகின்றனர். கோவிலில் தரிசனம் செய்து வேண்டினால், சந்தன பிரசாதம் கொடுப்பர். இதை குறிப்பிட்ட நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அதுவரை இறைச்சி சாப்பிடாமல், மதுபானம் குடிக்காமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி செய்தால் நாளடைவில் ஆஸ்துமா குணமாகும்.
குணமடைந்த பின் வெள்ளி கம்பி, ஒரு கிலோ மிளகு, பூசணிக்காய் காணிக்கை செலுத்த வேண்டும். இதுவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து குணமடைந்து உள்ளனர். மலை மீது இக்கோவில் அமைந்துள்ளது. செம்மண் பாறையில் இருந்து, இயற்கையாக பாயும் நீரூற்று தீர்த்த பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கோவில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு பிரம்ம களசோற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெங்களூரில் இருந்து, 349 கி.மீ., தொலைவிலும், மைசூரில் இருந்து 254 கி.மீ., தொலைவிலும் மங்களூரின் ஆதி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மங்களூரு விமான நிலையம் அருகிலேயே உள்ளது. காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் தரிசன வசதி உள்ளது.விமானத்தில் வருவோர், மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் செல்லலாம்.
அரசு, தனியார் பஸ்கள், ரயில்களும் இயக்கப்படுகின்றன. மங்களூரில் தங்குவதற்கு ஹோட்டல், ரிசார்ட் வசதிகளும் உள்ளன.
மேலும்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி