என்.எல்.சி.,யில் முற்றுகை; 135 விவசாயிகள் கைது

நெய்வேலி : கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் நேற்று என்.எல்.சி., அனல்மின் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
மாநில தலைவர் வேலுசாமி தலைமையில், மாநில பொது செயலாளர் பழனி முருகன், பொருளாளர் ராஜேஷ் உட்பட 9 விவசாய அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவது என்பது காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமையை பறிக்கும் முயற்சியாகும். எனவே, தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடக மாநிலத்திற்கு நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் என்.எல்.சி., மின்சாரத்தை வழங்கக் கூடாது.
தமிழக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிராக செயல்படுவோம்' என கூறினர். மதியம் பகல் 1:00 மணிக்கு போலீசாரின் தடையை மீறி என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தை நோக்கி சென்ற விவசாயிகள் சங்கத்தினர் 135 பேரை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.


மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை