நாங்கள் மீண்டும் பறப்போம்: சுனிதா வில்லியம்ஸ் உறுதி

புதுடில்லி: மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, நாங்கள் மீண்டும் பறப்போம் என சுனிதா வில்லியம்ஸ் உறுதி அளித்தார்.
கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். எட்டு நாட்களுக்கான பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்களாக நீடித்தது. சமீபத்தில் இருவரும் பத்திரமாக பூமி திரும்பினர்.
இந்நிலையில், விண்வெளி மையத்தில் இருந்து திரும்பிய பிறகு, நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் முதல் முறையாக ஊடகங்களுக்கு உரையாற்றினர். மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பறப்பீர்களா என்று கேட்டபோது, இரு விண்வெளி வீரர்களும் மீண்டும் பறப்போம் என தெரிவித்தனர்.
அப்போது சுனிதா வில்லியம்ஸ் கூறியதாவது: ஸ்டார்லைனர் மிகவும் திறமையான விண்கலம். சில விஷயங்களை சரி செய்ய வேண்டும். இது நிறைய திறன்களைக் கொண்டுள்ளது. பயிற்சி எங்களைப் புறப்படத் தயார்படுத்தியது. புதிய சவால்களுக்குத் தயாராக எங்களுக்கு உதவியது. என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன்.
ஆனால் மீண்டும் அங்கு செல்ல எங்களைத் தயார்படுத்தியதற்காக எங்கள் பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் நாங்கள் தரையிறங்கிய தருணத்திலிருந்து, எங்கள் ஆதரவுக் குழு எங்களுடன் இருந்து, எங்கள் வலிமையை மீண்டும் பெற உதவுகிறது. எங்களை வழிநடத்துகிறது.
என் தந்தையின் தாய் நாடான இந்தியாவுக்கு கண்டிப்பாக செல்வேன்; விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா அற்புதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, 'நாங்கள் மீண்டும் ஸ்டார்லைனரைப் பயன்படுத்துவோம். போயிங் மற்றும் நாசா உறுதிபூண்டுள்ளதால், அதை சரிசெய்து, அதைச் செயல்பட வைப்போம்'' என்று வில்மோர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (3)
அப்பாவி - ,
01 ஏப்,2025 - 18:24 Report Abuse

0
0
Reply
Mediagoons - ,இந்தியா
01 ஏப்,2025 - 13:24 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
01 ஏப்,2025 - 12:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement