கடன் தொல்லையால் தாய், மகன் தற்கொலை
தொட்டபல்லாபூர்: கடன் தொல்லையால், தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்து மகனும் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், கொனகட்டா கிராமத்தில் வசித்தவர் சந்திரிகா, 46. இவரது மகன் ரக்ஷித் பாபு, 24. இவர் ஸ்விக்கி, பைவ் ஸ்டார் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி பாயாக பணியாற்றினார்.
இவரது குடும்பத்தினர் பலரிடம் கடன் வாங்கி, அடைக்க முடியாமல் அவதிப்பட்டனர். கடன் கொடுத்தவர்கள், வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால், சந்திரிகா அவமானம் அடைந்தார். ஒன்றரை மாதத்துக்கு முன்பு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் தற்கொலை செய்து கொண்டதால், மனம் நொந்த ரக்ஷித் பாபு, நேற்று காலை தொட்டபல்லாபூரின் நந்திமோரி அருகில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தொட்டபல்லாபூர் ஊரக போலீசார், அவரது உடலை மீட்டனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை