இறந்த தந்தை முகத்தை பார்க்க வராத மகன்
பெலகாவி: மருத்துவமனையில் இறந்த தந்தையின் முகத்தை கூட பார்க்க மகன் வரவில்லை. இதனால் போலீசார், அவரது மகளை தொடர்பு கொண்டு தகவல் கூறியுள்ளனர்.
கோவாவை சேர்ந்தவர் சதீஸ்வர சின்ஹா, 62. இவர் ஹோட்டலில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சதீஸ்வர சின்ஹா காயமடைந்தார்.
இவரை மார்ச் 22ம் தேதியன்று, சிகிச்சைக்காக அவரது மகன் உத்தம் சின்ஹா, பெலகாவியின் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பின் டாக்டர்களிடம் தகவல் கூறாமல் சென்றுவிட்டார்.
சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை சதீஸ்வர சின்ஹா உயிரிழந்தார். இந்த தகவலை கூற, உத்தம் சின்ஹா கொடுத்த மொபைல் போனில் மருத்துவமனை ஊழியர் தொடர்பு கொண்டனர்.
அப்போது தான், அந்த மொபைல் எண், அவருடையது அல்ல; அவரது தந்தை பணியாற்றிய ஹோட்டல் உரிமையாளரின் மொபைல் எண் என்பது தெரிந்தது.
ஹோட்டல் உரிமையாளரிடமே, உத்தம் சின்ஹாவின் மொபைல் எண்ணை பெற்று, சதீஸ்வர சின்ஹா இறந்த தகவலை கூறினர். ஆனாலும் அவர், தன் தந்தையின் முகத்தை கூட பார்க்க வரவில்லை.
என்ன செய்வது என்பது தெரியாமல் மருத்துவமனை ஊழியர்கள், ஷஹாபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.
கோவாவில் உள்ள சதீஸ்வர சிம்ஹாவின் மகளின் மொபைல் எண்ணை கண்டுபிடித்து, தகவல் கொடுத்தனர்.
வருவதாக அவர் கூறியுள்ளார். அவரது வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
மேலும்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தில் செய்த மணி கண்டெடுப்பு!
-
பாலியல் குறித்து ஆபாச கருத்து:இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் நீக்கிய யூடியூபர் அபூர்வா மகிஜா
-
பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம்; விழுப்புரத்தில் வி.ஏ.ஓ., கைது
-
'பேட் மேன் பார்எவர்' புகழ் ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் காலமானார்
-
கப்பலில் கடத்தப்பட்ட 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் ; கடற்படையினர் அதிரடி
-
கடலூரில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை