'ஹனிடிராப்பில் தொடர்பு இருவரும் நல்லவர் அல்ல'

ஹாசன்: ''ஹனிடிராப் மிகவும் மோசமான விஷயமாகும். இவ்விஷயத்தில் இரண்டு பேருமே நல்லவர்கள் அல்ல,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.

ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'ஹனிடிராப்' செய்வது சரியல்ல. இது மிகவும் மோசமானது. இவ்விஷயத்தில் இருவருமே நல்லவர்கள் அல்ல. ஹனிடிராப் செய்வோர், இந்த மோசமான வலையில் சிக்குவோர் என, இருவருமே தவறு செய்தவர்கள் தான்.

ஜனநாயக நடைமுறையை, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். முந்தைய அரசியலுக்கும், இப்போதைய அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்களை எதற்காக தேர்ந்தெடுத்தனர் என்ற தெளிவு இருக்க வேண்டும்.

விதான்சவுதா என்றால் இந்த மாநிலத்தின் சக்தி பீடம். அனைவருக்கும் கோவில் போன்றதாகும். இங்கு ஹனிடிராப் போன்ற அவலங்கள் நடப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement