மிருகக்காட்சி சாலைக்கு இன்று வார விடுமுறை ரத்து

மைசூரு: சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மைசூரின் மிருகக்காட்சி சாலைக்கு இன்று வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூரில் உள்ள மிருகக்காட்சி சாலை, சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள பல ஆயிரக்கணக்கான விலங்குகள், பறவைகளை பார்த்து ரசிக்கின்றனர்.

பராமரிப்பு பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிப்பது வழக்கம். யுகாதி, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு, தொடர் விடுமுறை வந்ததால் சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர். இன்றும் கூட அதிக எண்ணிக்கையில் வருகை தரும் வாய்ப்புள்ளது.

அது மட்டுமின்றி, கோடை விடுமுறையும் துவங்கியுள்ளது. மிருகக்காட்சி சாலைக்கு வரும் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே மிருகக்காட்சி சாலைக்கு, இன்று வார விடுமுறையை ரத்து செய்து, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வழக்கம் போன்று இயங்கும்.

Advertisement