வன்மீக மஹா மாரியம்மன் கோவில் 28ம் ஆண்டு விழா நாளை துவக்கம்

பெங்களூரு: ஹலசூரு கல்லஹள்ளி வன்மீக மஹா மாரியம்மன் கோயிலின் 28ம் ஆண்டு பிரதிஷ்டாபனை விழா, நாளை துவங்குகிறது.

பெங்களூரு ஹலசூரு ஏரி அருகில் உள்ள கல்லஹள்ளியில், ஸ்ரீ வன்மீக மஹா மாரியம்மன் கோவில் 28ம் ஆண்டு பிரதிஷ்டாபனை, நாளை துவங்குகிறது.

அன்று மாலையில் சிறப்பு ஹோமம், பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி நடக்கிறது.

மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திரசேகர் வழங்குகிறார். இரவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஏப்., 3ம் தேதி காலையில் லலிதா கலச ஸ்தாபனை, கணபதி ஹோமம், அய்யப்பன், முருகன், தட்சிணா மூர்த்தி, நவக்கிரஹ ஹோமங்கள் நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான லலிதா கலச பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது. மதியம் மஹா மங்களாரத்தி, அன்னதானம் நடக்கிறது. இரவில் அம்மனின் தேர் ஊர்வலம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, ஆலய தர்மகர்த்தா ராமராஜ் செய்துள்ளார். பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்க, சுகுமாறன் குருசுவாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement