அய்யப்ப சுவாமி கோவிலில் 38ம் ஆண்டு பிரதிஷ்டாபனை

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை விவேக் நகரில் அமைந்துள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 38ம் ஆண்டு பிரதிஷ்டாபனை விழா நேற்று நடந்தது.

இக்கோவிலில் 1987 மார்ச் 31ல் அய்யப்ப சுவாமி விக்ரஹம் ஐதீக முறைப்படி பிரதிஷ்டாபனை செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்நாளில் சிறப்பு பூஜைகளுடன் விழா நடத்தப்படுகிறது. நேற்று 38ம் ஆண்டு பிரதிஷ்டாபனை தினத்தையொட்டி, காலையில் கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், மஹா மங்களாரத்தி பூஜைகளை விஷ்ணு பட்டாதிரிபாட் குழுவினர் செய்தனர்.

மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ சுவாமி அய்யப்பன், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன், சுப்ரமணிய சுவாமி நகர் வலம் வந்தனர்.

விவேக் நகர், கீதா சாலை, பிரிட்சர்ட் சாலை, சுவர்ணா நகர், வழியாக அய்யப்ப சுவாமி கோவிலை தேர் வந்தடைந்தது. கோவிலில் சிறுமியரின் பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement