ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களில் மே 5ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூன் 15ல் நடைபெற உள்ளது. பின்னர் முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். துணை ஆட்சியர் நிலையில் 28 பணியிடங்கள், டி.எஸ்.பி., நிலையில் 7 பணியிடங்கள், வணிக வரி உதவியாளர் நிலையில் 19 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையில் 7 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல நிலையில் 3 பணியிடங்கள், தொழிலாளர் உதவி ஆணையர் நிலையில் 6 பணியிடங்கள் என மொத்தம் 70 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/Group%20IA%20Notification_English_.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும்
-
ஒன்றுபட்ட அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி; சைதை துரைசாமி வலியுறுத்தல்
-
லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்
-
பிரியாணி, சவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி; பிலால் ஹோட்டலுக்கு சீல்
-
அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை சந்திப்பு
-
வெப்ப அலை எதிரொலி; கர்நாடகாவில் அரசு அலுவலக நேரத்தில் மாற்றம்
-
தேனீக்கள் கொட்டியதில் கேரள சுற்றுலாப் பயணி பலி