பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்

புதுடில்லி: திருத்தப்பட்ட வக்பு மசோதா பார்லிமென்டில் நாளை (ஏப்ரல் 02) தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, மார்ச் 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை (ஏப்ரல் 02) மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளன. மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிய 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இது குறித்து, பார்லி., கூட்டுக்குழு தலைவருமான ஜகதாம்பிகா பால் கூறியதாவது:
இந்த மசோதா வக்பு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி முஸ்லிம்களை வெறும் ஓட்டு வங்கியாகக் கருதுகிறது. திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



மேலும்
-
சர்வதேச விண்வெளி மையம் செல்கிறார் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா!
-
ஐ.பி., பெண் அதிகாரி தற்கொலை: நண்பரை கண்டுபிடிக்க 'லுக் அவுட்' சர்க்குலர்
-
ரிசர்வ் வங்கிக்கு புதிய துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்
-
சிராஜ் மிரட்டல் பந்துவீச்சு; பெங்களூரு அணி தடுமாற்றம்
-
அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி, கல்லுாரிகள்: வெட்கக்கேடு என்கிறார் சீமான்
-
ஐ ஆம் ஜஸ்ட் 98