ஐ.பி., பெண் அதிகாரி தற்கொலை: நண்பரை கண்டுபிடிக்க 'லுக் அவுட்' சர்க்குலர்

திருவனந்தபுரம்: மத்திய உளவுத்துறை (ஐ.பி.,) அதிகாரி மேகா மதுசூதனன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, அவரது ஆண் நண்பரான சக ஐ.பி., அதிகாரி சுகந்த் சுரேஷ் என்பவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இமிக்ரேசன் பிரிவில் உதவி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் மேகா மதுசூதனன், 24. மத்திய உளவுத்துறையான இன்டெலிஜென்ஸ் பீரோவை சேர்ந்தவர்.
இவர், மார்ச் 24 அன்று காலை திருவனந்தபுரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணத்துக்கு, அவருடன் உறவில் இருந்த நண்பரான, சக ஐ.பி., அதிகாரி சுகந்த் சுரேஷ் தான் காரணம் என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணைக்கு அழைக்க முயற்சித்தபோது சுகந்த்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களும் போனை ஆப் செய்து விட்டு தப்பி விட்டனர்.
இதையடுத்து சுகந்த் சுரேஷ் நாட்டை விட்டு வெளியேறி விடாமல் இருக்க, போலீசார் 'லுக் அவுட்' சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இரண்டு தனிப்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தங்கள் மகளை பணம் பெறுவதற்காக மட்டும் சுகந்த் பயன்படுத்திக் கொண்டதாகவும், அவரது கணக்கில் இருந்து பெருமளவு பணம் சுகந்த் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இருவருமே மாறி மாறி பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். அச்சுறுத்தல், பணம் பறிப்பு போன்ற குற்றம் நிகழ்ந்ததா என்பதை உறுதி செய்ய மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.








மேலும்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
-
வக்பு மசோதாவுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு
-
நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா: ராஜ்யசபாவில் நட்டா பேச்சு
-
40 அடி எழும்பிய அலைகள்; உல்லாசக்கப்பலில் சென்ற பயணிகள் பீதி!
-
மீனவர் ஓட்டுக்காக கச்சத்தீவு தீர்மானம்: சீமான்