'உலக' கனவில் கோலி

பெங்களூரு: வரும் 2027 உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
இந்திய அணி 'சீனியர்' வீரர் கோலி 36. கடந்த 2024ல் உலக கோப்பை வென்ற பின், 'டி-20' அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். 2026ல் இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடரில் இவர் பங்கேற்க மாட்டார்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில், அதிக சதம் அடித்த வீரரான கோலி (51), 302 போட்டியில் 14,181 ரன் எடுத்துள்ளார். 2013, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது.
இதுகுறித்து கோலி கூறுகையில்,'' தற்போதைக்கு ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. அடுத்த இலக்கு என்ன என்றால், அதுவும் தெரியாது. ஒருவேளை மீண்டும் உலக கோப்பை வெல்ல முயற்சி செய்வேன்,'' என்றார்.
இதனால், வரும் 2027ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை தொடருக்குப் பின் கோலி ஓய்வு பெறலாம். 2027ல் இந்தியா சாதித்தால், இருமுறை (2011, 2027) ஒருநாள் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் ஆகலாம். 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் கோலி தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.
14 ஆண்டுக்கு முன்...
கடந்த 2011, ஏப்ரல் 2ல் மும்பை, வான்கடே மைதானத்தில் ஒருநாள் உலக கோப்பை தொடர் பைனல் நடந்தது. இந்தியா, இலங்கை மோதின. இலங்கையின் (274/6) இலக்கை 'சேஸ்' செய்தது இந்தியா. சேவக் (0), சச்சின் (18) ஏமாற்ற, காம்பிர் (97) கைகொடுத்தார். கோலி 35 ரன் எடுத்தார். யுவராஜ் (21), தோனி (91) அசத்தினர். கடைசியில் குலசேகரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, 1983க்குப் பின் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்தார். தற்போது 14 ஆண்டு ஆன போதும் இந்தியா மீண்டும் சாதிக்க முடியவில்லை.
மேலும்
-
'காசா கிராண்டு' புதுப்பாக்கம் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக வீடுகள்
-
போதை ஊசி பாதிப்பு சிறுவன் 'அட்மிட்'
-
பைக் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி, மகன் உட்பட 3 பேர் பலி
-
போரூரில் 'ஜி ஸ்கொயர் ஆரன்யா' புதிய அடுக்குமாடி திட்டம் அறிவிப்பு
-
'திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிலைக்குழு' வார்டு குழு கூட்டத்தில் தீர்மானம்
-
பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு