பதவி நீக்க உத்தரவை எதிர்த்து சுயேட்சை கவுன்சிலர் வழக்கு

சென்னை, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, தாம்பரம் மாநகராட்சி, 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப் உட்பட நான்கு கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர், கடந்த மார்ச் 27ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தாம்பரம் கவுன்சிலர் ஜெயபிரதீப் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டல குழு தலைவராக இருந்த தனக்கு எதிராக, கவுன்சிலர்களை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி, நான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். தன் விளக்கத்தை கேட்காமல் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத், மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Advertisement