பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி

1

லக்னோ: பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.


18 வது பிரிமீயர் லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உ.பி.,யின் லக்னோவில் நடக்கும் இன்றைய( ஏப்.,01) லீக்போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.இதனையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.


லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களான, மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் மிட்செல் மார்ஷ், தான் சந்தித்த முதல் பந்திலேயே, ரன் ஏதும் இழக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குபிடித்த மார்க்ரம் 28 ரன்கள் சேர்த்து பெர்குசன் பந்தில் போல்டானார்.அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன்,ஓரளவு நிலைத்து ஆடி, 44 ரன்கள் சேர்த்து சஹால் பந்தில் ஆட்டமிழந்தார்.


அடுத்து வந்த ரிஷந் பண்ட் 2 ரன்களில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த படோனி 41, ரன்களும், டேவிட் மில்லர் 19 , ரன்களும், சமத் 27 ரன்களும் சேர்க்க இறுதியில் லக்னோ அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.

துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் பிரப்சிம்ரன் சிங்குடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

பிரப்சிம்ரன் சிங் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும், நேஹல் வதீராவும் அதிரடி காட்டி 16.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி 8
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களுடனும், நேஹல் வதீரா 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

Advertisement