நாச்சிகுப்பம் ஊராட்சிபள்ளி ஆண்டு விழா


நாச்சிகுப்பம் ஊராட்சிபள்ளி ஆண்டு விழா


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயா வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பழனிசாமி, மரியரோஸ், வட்டார வள மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர்கள் முனிசாமி, சங்கீதா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
விழாவில், மாணவ, மாணவியரின் பரத நாட்டியம், கோலாட்டம், நகைச்சுவை நாடகம், கரகம், காளிவேட நடனம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில், பெற்றோர், ஊர்மக்கள், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சகுந்தலா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர் சகாதேவன் நன்றி கூறினார்.

Advertisement