கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகங்களைஇணைக்கும் நடைபாலம் திறப்பு


கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகங்களைஇணைக்கும் நடைபாலம் திறப்பு


கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என, அனைத்தும் ஒரே வளாகத்தில் இயங்கி வந்தன. இதில், 15-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், 450 வக்கீல்கள் மற்றும், 300 பணியாளர்களுடன் நீதிமன்றம் இயங்கியது. இடநெருக்கடி யால், கிருஷ்ணகிரி நீதிமன்ற கட்டடத்தின் பின்புறம், புதிய கட்டடம் கட்டப்பட்டது.
அதன்படி பழைய நீதிமன்ற கட்டடத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் 1, 2, முனிசிப் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்டவை இயங்குகின்றன. சிறப்பு சார்பு நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து குறித்து விசாரிக்கும் நீதிமன்றங்கள் உள்ளிட்டவைகள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. இதனால், பல வழக்குகளில் வாதாடும் வக்கீல்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், பழைய கட்டடத்தில் இருந்து இறங்கி, புதிய கட்டடத்திற்கு நடந்து சென்று வந்தனர்.
இதனால், 2 கட்டடங் களையும் இணைக்கும் வகையில், 100 அடி தொலைவிற்கு நடைபாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, காங்., முன்னாள் எம்.பி., செல்லக்குமார், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நடைபாலம் கட்ட நிதி ஒதுக்கினார். பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிமன்ற வளாகங்களை இணைக்கும் நடைபாலத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி லதா திறந்து வைத்தார்.
இதில், அனைத்து நீதி பதிகள், கிருஷ்ணகிரி வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, செயலாளர் சக்திநாராயணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement