மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது புளியரணங்கோட்டையில் விபத்து பீதி

சித்தாமூர்:சித்தாமூர் அருகே புளியரணங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் பலவீனமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து உள்ளதால், குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகில் அரசு பள்ளி உள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக பள்ளி அருகே பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்