பள்ளியில் பூஜ்ய கழிவு மேலாண்மை வேளாண் மாணவியர் விழிப்புணர்வு
பள்ளியில் பூஜ்ய கழிவு மேலாண்மை வேளாண் மாணவியர் விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி:ஓசூர், அதியமான் வேளாண் கல்லுாரி மாணவியர், கிராமப்புற வேளாண் பணி அனுபவத்திற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்
நிலைப்பள்ளியில், 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, பூஜ்ய கழிவு மேலாண்மை மற்றும் 'மஞ்சப்பை' பயன்பாட்டை வலியுறுத்தி, வேளாண் கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மட்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மட்பாண்டம், பனையோலை, காகிதம் மற்றும் விரைவில் மட்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க, எதிர்கால சந்ததியினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, மாணவ பருவத்திலிருந்தே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள், மனிதர்களின் ரத்தத்தில் திசுக்களாக படிந்து, கட்டிகள், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், நாளமில்லா அமைப்பின் தொந்தரவு மற்றும் பிற கோளாறுகளால் பாதிக்கப்படுவதால், நாம் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சுதாராணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மேலும்
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்