ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் கடவுப்பாதை 13, 14, 15ல், 108.95 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் மூன்று மேம்பால பணிகளை, கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின், நில எடுப்பு தனி வட்டாட்சியரிடம் சாலை விரிவுபடுத்தும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதில், நெடுஞ்சாலைத் துறை திருவள்ளுர் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பர்னாண்டோ, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ப்ரீத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement