புதுார்மேடு நுாலக வாயிலில் குவிந்து வரும் மதுபாட்டில்கள்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புதுார்மேடு கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றியுள்ள பைவலசா, வெங்கடாபுரம், தாமரைக்குளம், தேவலாம்பாபுரம், கட்டாரிகுப்பம், விடியங்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளவும், அன்றாட தேவைக்காகவும், தினசரி புதுார்மேடு கிராமத்திற்கு சென்று வருகின்றனர். புதுார்மேடு பேருந்து நிறுத்தம் அருகே, ஊராட்சி நுாலகம் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு ஊராட்சிகளில் நுாலகங்கள் செயல்படாமல் உள்ள நிலையில், இந்த நுாலகம் தொடர்ந்து முறையாக செயல்பட்டு வருகிறது. நாளிதழ்களும், புத்தகங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான வாசகர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் இந்த நுாலக வளாகத்தில் 'குடி'மகன்கள் மது அருந்தி வருகின்றனர். காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், வாசகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, நூலக வளாகத்தில் மது அருந்தும் மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு