மதுரை --- திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி

விருதுநகர்:மதுரை -- திருவனந்தபுரம் அமிர்தா' ரயில்களில் (16343 / 16344) முன்பதிவில்லா பயணிகள் வசதிக்காக ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி குறைக்கப்பட்டு ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஏ.சி., முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 3 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன்இயக்கப்படவுள்ளது.

இந்நடைமுறை ஜூன் 5 முதல் திருவனந்தபுரம் ரயிலில், ஜூன் 6 முதல் மதுரை ரயிலில் அமலுக்கு வருகிறது.

Advertisement