கரடுமுரடான பச்சம்பாக்கம் சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பவுஞ்சூர்,:பவுஞ்சூர் அருகே பச்சம்பாக்கம் பகுதியில் இருந்து தர்காஸ் வழியாக நரியூர் சாலையை இணைக்கும், 3.5 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
இச்சாலை நரியூர், பவுஞ்சூர், பச்சம்பாக்கம், கல்குளம் ஆகிய கிராம மக்களின் பிரதான சாலையாக உள்ளது.
இருசக்கர வாகனம், கார், லாரி, தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து என, ஏராளமான வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாய வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், கரடுமுரடாக உள்ள இச்சாலையில் சென்றுவர சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ள பச்சம்பாக்கம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
இரட்டை இலை சின்ன வழக்கு: விசாரணைக்கு காலக்கெடு கோரி இபிஎஸ் மனு
-
ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்
-
ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கலக்கல்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு