போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்

சென்னை,
பாண்டிபஜார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்களான அனில்குமார், நாராயணமூர்த்தி, போலீஸ்காரர் அழகரசன் ஆகியோர், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில், நேற்று அதிகாலை 3:30 மணியளவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாண்டிபஜார் காவல் நிலைய 'ஏ' செக்டார் போலீஸ்காரர் சென்னன், 32, வள்ளூவர் கோட்டம் பகுதியில் தேநீர் குடித்துவிட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக அதிவேகமாக 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த மூவர், காவலர் சென்னன் மீது மோதினர். இதில் அவருக்கு, நான்கு பற்கள் உடைந்தது மட்டுமல்லாமல், கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்ட நிலையில், மற்ற இருவரும் தப்பினர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மருத்துவமனைக்கு சென்ற போலீசார், விபத்து ஏற்படுத்தியவரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் கோடம்பாக்கம், முப்பன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த குகன், 19, என்பதும், நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருவதும் தெரியவந்தது.
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 19, மற்றும் 15 வயது சிறுவனுடன், மெரினாவிற்கு சென்று கஞ்சா புகைத்துவிட்டு, ஸ்கூட்டரில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. குகனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
-
பங்கு சந்தையில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
-
குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை
-
சதுரகிரியில் தினமும் பக்தர்களுக்கு அனுமதி
-
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு ஆயுள்
-
அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்திவைப்பு