சதுரகிரியில் தினமும் பக்தர்களுக்கு அனுமதி
விருதுநகர்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்கள் தினமும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பக்தர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென விருதுநகர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி எப்போது முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பக்தர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதல்படி பக்தர்கள் தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை சோதனை சாவடி வழியாக அனுமதிக்கப்படுவர். மாலை 4:00 மணிக்குள் திரும்பி வரவேண்டும். அனுமதியின்றி மலையில் தங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள் , எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்