குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை
திருவாரூர்:நன்னிலம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, பெரும்புகளூர் கிராமத்தை சேர்ந்தவர், பாலமுருகன், 45, கொத்தனார்.
இவர் எதிர் வீட்டில் வசிப்பவர் மாதவன், 35, நாகப்பட்டினத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 2016ல் நடந்த கோவில் திருவிழாவில் இருபிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று, இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக சென்று வந்தனர்.
நேற்று மாலை, 6:00 மணிக்கு, பாலமுருகன், மாதவன் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாதவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகனை குத்தினார். அதே இடத்தில் அவர் இறந்தார்.
தகவல் அறிந்த நன்னிலம் போலீசார், பாலமுருகன் உடலை கைப்பற்றி, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நன்னிலம் போலீசார் மாதவனை கைது செய்து விசாரிக்கின்னறர்.
மேலும்
-
டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி: பொருட்களை வாங்க குவிந்த அமெரிக்கர்கள்
-
இந்திய பெருங்கடலில் இந்திய நலனை பாதுகாப்பதில் முன்னுரிமை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
-
நக்சல்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்: அமித்ஷா
-
சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வி; பவர் பிளே ரன் குவிப்பில் கடைசி இடம்
-
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா
-
பாம்பன் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி; ரூ.8,300 கோடி நலத்திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்