கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு ஆயுள்

தேனி:தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, 2023 டிச.6ல் அருகில் கூடலுார் தென்னந்தோப்பு பகுதியில் கீரை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கம்பம் சாமாண்டிபுரம் கன்னிமார் கோயில் தெரு உலகமுத்து மகன் விஜயகுமார் 25, மூதாட்டியை தாக்கி, கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

மூதாட்டி கூச்சலிடவும் துணியால் கழுத்தை நெரித்து கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் தப்பியோடினார். கூடலுார் வடக்கு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்தது. விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

Advertisement