அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி மேலாளராக பணியாற்றியவர் பாபு.60. இவர் தற்போது பெரம்பலுார் நகராட்சி கணக்கராக பணியாற்றி, மார்ச் 31ல் பணி ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அதிக சொத்து சேர்த்தற்கான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாத நிலையில், அரசு அனுமதி இன்றி சொத்துக்கள் வாங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை செய்தனர். இதன் தொடர்ச்சியாக மார்ச் 31 அன்று பாபு பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதனை நிறுத்தி வைத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டார். பாபு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணி 127வது இடம்: 'பிபா' கால்பந்து தரவரிசையில்
-
மும்பைக்கு கிளம்பிய விமானம் துருக்கியில் அவசர தரையிறக்கம்: பல மணி நேரமாக பரிதவிக்கும் இந்தியர்கள்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
Advertisement
Advertisement