கால்வாயில் ஆண் சடலம்

படப்பை,குன்றத்துார், வரதராஜபுரம் சாஸ்திரி நகரில் உள்ள கால்வாய் நீரில், நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.

தகவறிந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement