காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை

சென்னை:காங்., - மாங்குடி: காரைக்குடி தொகுதி, தேவகோட்டையில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மகளிர் கலைக் கல்லுாரி துவக்க வேண்டும். தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலை சுற்றி, வணிக கட்டடங்கள் இடிந்த நிலையில் உள்ளன. அங்கு புதிய வணிக வளாகம் கட்டப்படுமா.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, வார சந்தைக்கு 90 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு 400 கடைகள் தேவை. இன்னும் 300 கடைகள் தேவை என்பதால், அவற்றை கட்டித் தர வேண்டும். கோவில் சந்தை வளாகத்தில், திருமண மண்டபம் கட்டித் தர வேண்டும்.

காரைக்குடி சங்கராபுரம் பொய் சொல்லா மெய் அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும்.

அமைச்சர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement