கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளதால், தேவைப்படும் நேரங்களில் மட்டும் போக்குவரத்து மாற்றப்பட உள்ளன.

* தேவடி தெருவில் இருந்து நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வழியாக கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது

* நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து, கிழக்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* மேற்கு சித்ரகுளத்தில் இருந்து தெற்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* டி.எஸ்.வி.கோவில் தெருவில் இருந்து தெற்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* ஆடம்ஸ் தெருவில் இருந்து தெற்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* ஆர்.கே.மடம் சாலையிலிருந்து தெற்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* ஆர்.கே.மடம் சாலையிலிருந்து வடக்கு மாடவீதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* கச்சேரி சாலையிலிருந்து மத்தள நாராயணன் தெரு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வெங்கடேச அக்ரஹார தெரு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது

* முண்டகக்கண்ணியம்ன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

டேக் டைவர்ஷன்

1. ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, ரங்கா சாலை, சி.பி.,ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.

2. அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள், ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன்சாலை, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.,சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

3. ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.,சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லுாரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

4. வரும் 5ம் தேதி அதிகாரநந்தி திருவிழா அன்று காலை 5:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையிலும், 9ம் தேதி தேர் திருவிழா அன்று காலை, 6:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையிலும், 10ம் தேதி அன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம், 1:00 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.



வாகனங்களை எங்கே நிறுத்துவது?

அதிகாரநந்தி, தேர், அறுபத்துமூவர் திருவிழா நடைபெறும் நாட்களில், நான்கு மாடவீதிகளிலும் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.* கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை சாய்பாபா கோவில் அருகில் உள்ள திருமயிலை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரம் பக்தர்களின் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள், கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* காவல் துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உளள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement