கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது
புதுச்சேரி: பொது இடத்தில் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வெங்கட்டா நகர் பூங்கா அருகே இரண்டு பேர் கத்தியுடன் நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக பெரியக்கடை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று கத்தியுடன் நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், லாஸ்பேட்டை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ், 31, கோவிந்த சாலையை சேர்ந்த தியாகராஜன், 31, என தெரியவந்தது. அவர்களிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement