பிரசிடென்சி பள்ளியில் வழிகாட்டி நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி (எலைட்) இணைந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி எலைட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் , முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பளராக இந்திய பொது நிர்வாக நிறுவனம் சேர்மன் தனபால், சென்னை ஆர்.எம்.டி., மருத்துவமனை இயக்குனர் ரிப்பபலிக்கா ஸ்ரீதர், செங்கல்பட்டு எஸ்.ஐ.ஆர்.சி., சேர்மன் நரசிம்ம ராகவன், பாலாஜி ரங்கராஜன், ஆடிட்டர் ஸ்ரீதர், சென்னை ரிப்ளக்ட் செக்யூரிட்டி சொலியூஷன் இயக்குனர் சந்திரமவுலி ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவம், பொறியியல், வணிகவியல் சார்த்த பல்வேறு மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் கவுதம், துணை முதல்வர்கள் ஆரோக்கியதாஸ், ஜோசப் ஜான்பால் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும்
-
த.வெ.க., மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் தள்ளுமுள்ளு
-
டிரம்ப் வரி தாக்குதல்: பலத்த அடி, ஆனால் காயமில்லை
-
மாநகராட்சி கவுன்சிலருக்கு சாதனை விருது
-
அண்ணாசாலையில் தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ஒருவர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்
-
31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது
-
தாம்பரம் - ராமேஸ்வரத்திற்கு புது ரயில் அட்டவணை வெளியீடு