'லிப்ட்' கேட்டு வழிப்பறி 3 பேர் கைது
அமைந்தகரை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக், 19. இவர் கடந்த 30ம் தேதி அமைந்தகரை பகுதியில் உள்ள உறவினரை பார்த்து விட்டு, பைக்கில் அமைந்தகரை முரளிகிருஷ்ணா கல்யாண மண்டபம் அருகே வந்தார்.
அங்கு நின்றிருந்த இரண்டு பேர், ரபீக்கின் பைக்கை நிறுத்தி 'லிப்ட்' கேட்டு சென்றனர். பாதி வழியில் பைக்கில் இருந்து இறங்கினர்.
பின், ரபீக்கை மிரட்டி, 'ஆன்லைன்' வாயிலாக 2,100 ரூபாய் பெற்று தப்பி சென்றனர். இது குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்தனர். இதில், வளசரவாக்கம், அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன், 26, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 23, மணிகண்டன், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.
அதே நாள், மூவரும் ெஷனாய் நகரில் மற்றொரு நபரிடம் 700 ரூபாய் பறித்து சென்றனர். அவர்களிடம் இருந்து, 500 ரூபாய் மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement