புது பாஸ்போர்ட் மையம் அண்ணாமலை கோரிக்கை ஏற்பு
சென்னை, வட சென்னையில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்க வேண்டும் என்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த கோரிக்கையை, வெளியுறவு துறை அமைச்சகம் ஏற்றுள்ளது.
இது குறித்து அண்ணாமலைக்கு, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
உங்கள் கோரிக்கை அமைச்சகத்தால் முறையாக ஆராயப்பட்டது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா இல்லாததால், வடசென்னையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க, வட சென்னையில் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பெரியார் நகர் பகுதியில் உள்ள தங்கள் அஞ்சல் நிலையத்தில், தேவையான இடத்தை வழங்குவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெரம்பலுாரில் மாணவியரை கடித்த விடுதி சமையலர் கைது
-
ஊட்டி, கொடைக்கானலில் 'புனிகுலர்' ரயில் இயக்க ஆய்வு
-
அணைப்பட்டி கோயில் அருகே பூங்கா அமைக்க கோரிக்கை
-
காரைக்குடியில் திருமண மண்டபம் எம்.எல்.ஏ., கோரிக்கை
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
-
பங்கு சந்தையில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
Advertisement
Advertisement