தேசிய நெடுஞ்சாலையில் படியும் மண்ணால் ஆபத்து

திருவேற்காடு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவேற்காடு முதல் மதுரவாயல் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, சாலையோரத்தில் மண் படிந்து காணப்படுகிறது. கனரக வாகனங்கள் வேகமாகச் செல்லும் போது, புழுதி மண்டலமாக மாறி இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் பதம் பார்க்கிறது.
குறிப்பாக, திருவேற்காடு, வேலப்பன்சாவடியில், சாலையோரத்தில் அதிக அளவில் மணல் குவிந்துள்ளது. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதால் விபத்து ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அவலம் குறித்து, புகைப்படத்துடன் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி, விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது. விபத்து, உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, 'எங்களுக்கு எந்த புகாரும் வருவதில்லை; வந்தால் பார்க்கலாம்' என்றனர்.
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்
-
பங்கு சந்தையில் பணம் இழந்த ஐ.டி., ஊழியர் தற்கொலை
-
குடிபோதையில் தகராறு: கொத்தனார் கொலை
-
சதுரகிரியில் தினமும் பக்தர்களுக்கு அனுமதி
-
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு ஆயுள்
-
அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்திவைப்பு