பேட்டரி திருடியோர் கைது

சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, தேவநாயுடு தெருவை சேர்ந்தவர் வீரராகவன், 29. பக்கத்து தெருவில், சிமென்ட் கடை நடத்தி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன், கடை முன் நிறுத்தியிருந்த டாடா ஏஸ் வாகனத்தில் இருந்து, பேட்டரி திருடப்பட்டது.

புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த கிரிகண்ணன், 20, ஜான்சன், 41, ஆகியோர், சரக்கு வாகனத்தில் இருந்து பேட்டரி திருடியது தெரிந்தது.

நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement