வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
வியாசர்பாடி, ஏப். 2-
வியாசர்பாடியில் இருந்து பேசின்பாலம் நோக்கி, போர்டு எண்டேவர் சொகுசு கார் நேற்று சென்றது. இதில், சவுகார்பேட்டையை சேர்ந்த, 16, 17, 18 வயது சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கொண்டித்தோப்பில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.
வியாசர்பாடி மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது, திடீரென அதிவேகமாக சென்ற கார், பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது.
காருக்குள் சிக்கியிருந்த ஐந்து பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் அனைவரும் தப்பினர்.
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கிரேன் உதவியுடன், காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், லைசென்ஸ் இல்லாமல், 18 வயது இளைஞர் காரை ஓட்டியதும், வேகத்தை கட்டுப்படுத்த முயன்று, தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்ததும் தெரிய வந்தது.
விபத்து ஏற்படுத்திய வாலிபரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்திவைப்பு
-
விலை சரிந்த புடலங்காய் கிலோ ரூ.11க்கு விற்பனை
-
ரூ. 27 லட்சம் மோசடி தம்பதி தலைமறைவு
-
அக்காவை கொன்ற தம்பி
-
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் கொடியேற்றம்
-
ஆரணி ஆற்று கரைகளை சீரமைப்பதில் அலட்சியம் குடியிருப்புகளுக்குள் புகும் வெள்ளநீரால் பரிதவிப்பு